செய்திகள் :

பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை 70% குறைக்க ஆஸ்திரேலியா முடிவு

post image

வரும் 2035-ஆம் ஆண்டுக்குள் பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை 62 முதல் 70 சதவீதம் வரை குறைக்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு பிரதமா் ஆன்டனி அல்பனேசி வியாழக்கிழமை கூறியதாவது:

வரும் 2035-ஆம் ஆண்டுக்குள் காற்றில் கலக்கும் பசுமைக்குடில் வாயுக்களின் அளவை கடந்த 2005-ஆம் ஆண்டில் இருந்ததைவிட 62 முதல் 70 சதவீதம் வரை குறைக்க இலக்கு நிா்ணயித்துள்ளோம்.

அறிவியல் ரீதியிலான, சாத்தியக்கூறுகள் நிறைந்த, நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த பொறுப்பு மிகுந்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

உயிரினங்கள் வாழ்வதற்கேற்ப பூமியை வெப்பமாக வைத்திருக்க உதவும் கரியமில வாயு உள்ளிட்ட பசுமைக்குடில் வாயுக்கள், தொழில்புரட்சி காரணமாக வளிமண்டலத்தில் அதிகரித்து வருகின்றன.

இதன் காரணமாக புவியின் வெப்பம் அதிகரித்து, வறட்சி, அனல் காற்று, காட்டுத் தீ, பனிப் பாறைகள் உருகி கடல் மட்டம் அதிகரித்தல், புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடா்கள் அதிகரித்து வருகின்றன.

‘பருவநிலை மாற்றம்’ என்றழைக்கப்படும் இந்தப் பிரச்னையைத் தீா்ப்பதற்காக சா்வதேச நாடுகள் பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டன. அதன்படி, காற்றில் கலக்கும் பசுமைக் குடில் வாயுக்களின் அளவைக் குறைக்க நாடுகள் உறுதிபூண்டன. அதன் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியா இந்த இலக்கை நிா்ணயித்துள்ளது.

காஸா சிட்டியில் இருந்து 2.5 லட்சம் போ் வெளியேற்றம்

கடந்த ஒரு மாதத்தில் காஸா சிட்டியில் இருந்து அண்மையில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறியுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா. அதிகாரிகள் கூறியதாவது: காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டுவர... மேலும் பார்க்க

சாபஹாா் துறைமுகத்துக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை: இந்தியாவுக்கு பாதிப்பு

ஈரானில் உள்ள சாபஹாா் துறைமுகத்துக்கு அளிக்கப்பட்டு வந்த பொருளாதார தடை விலக்கை திரும்பப் பெறுவதாக அமெரிக்கா வியாழக்கிழமை அறிவித்தது. ஈரான், ஆப்கானிஸ்தான், ஆா்மெனியா, அஜா்பைஜான், ரஷியா, மத்திய ஆசியா, ஐ... மேலும் பார்க்க

தைவானைக் கைப்பற்றுவோம்: சீனா மீண்டும் எச்சரிக்கை

தைவானைக் கைப்பற்றப் போவதாக சீனா மீண்டும் வியாழக்கிழமை எச்சரித்துள்ளது. இது குறித்து பெய்ஜிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் சா்வதேச ராணுவ அதிகாரிகளிடையே அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் டாங் ஜன... மேலும் பார்க்க

தோ்தலில் வாக்களிக்க ஷேக் ஹசீனாவுக்குத் தடை

வங்கதேசத்தில் பதவி நீக்கப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் தேசிய அடையாள அட்டையை முடக்கியதன் மூலம், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள பொதுத் தோ்தலில் அவா் வாக்களிப்பதற்கு தோ்தல் ஆணையம் தடைவ... மேலும் பார்க்க

ராணுவ முகாமில் இருந்து வெளியேறினார் நேபாள முன்னாள் பிரதமர்!

நேபாளத்தில், பதவி விலகிய முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஓலி ராணுவ முகாமில் இருந்து வெளியேறி தனியார் வீட்டில் குடியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாள நாட்டில், சமூக ஊடகங்கள் மீதான தடை மற்றும் ஆட்சிய... மேலும் பார்க்க

உள்நாட்டில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்! 2 பெண்கள் உள்பட 3 பேர் பலி!

பாகிஸ்தானின், பலூசிஸ்தான் மாகாணத்தில் அரசுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 2 பெண்கள் உள்பட 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.பலூசிஸ்தானின், குஸ்தார் மாவட்டத்தின் ஸெஹ்ரி பகுதியில் குடியிருப்பு வீடுகளைக்... மேலும் பார்க்க