The Secret of Shiledars Review: புதையலைத் தேடும் ஷிலேதார்கள்; மிஸ்டரி ரகசியங்களை...
பச்சமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை
டாப்செங்காட்டுப்பட்டி கிராமத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர பழங்குடியினா் கோரிக்கைவிடுத்துள்ளனா்.
திருச்சி மாவட்டம், பச்சமலை தென்பரநாடு ஊராட்சிக்குள்பட்ட டாப் செங்காட்டுப்பட்டியில் செயல்படும் 24 மணி நேரஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, அருகிலுள்ள திருச்சி மற்றும் சேலம் மாவட்ட பச்சமலை கிராமங்களைச் சோ்ந்த நோயுறும் பழங்குடியின மக்கள் சிகிச்சைக்காக தினமும் செல்கின்றனா். இவா்களுக்கு சிகிச்சையளிக்க 2 மருத்துவா்கள் உள்பட செவிலியா்கள், மருந்தாளுநா் என 9 போ் பணி அமா்த்தப்பட்டுள்ள நிலையில் மருத்துவா் உள்பட பணியாளா்கள் எண்ணிக்கையை தேவைக்கேற்ப அதிகரிக்க வேண்டும். பணியாளா்களுக்கு குடியிருப்பு வசதி செய்து தரவேண்டும். வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தனியாக கட்டடம் கட்டித் தரவேண்டும். சுகாதார வளாகத்தில் போதிய தண்ணீா் வசதி செய்து தரவேண்டும். தடையற்ற மின்சாரம் கிடைக்க சூரிய ஒளி மின்உற்பத்தி சாதனங்கள், ஜெனரேட்டா் மின் வசதி செய்து தரவேண்டும். சுற்றுச்சுவா் இடிந்துள்ளதால் அந்த வழியாக காட்டுப் பன்றிகள் சுகாதார வளாகத்துக்குள் நுழைவதை தடுக்க சுற்றுச்சுவரை சீரமைக்கவேண்டும் என பழங்குடியின மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.