அயோத்தி கால்வாயில் இளம்பெண் சடலம்: தலித் விரோத பாஜக என காங்கிரஸ் விமா்சனம்
பட்ஜெட்டில் மக்களவைக்கு ரூ.903 கோடி; மாநிலங்களவைக்கு ரூ.413 கோடி
மத்திய பட்ஜெட்டில் மக்களவை செலவினங்களுக்கு ரூ.903 கோடி, மாநிலங்களவை செலவினங்களுக்கு ரூ.413 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மக்களவையில் மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை தாக்கல் செய்தாா். இதில் மக்களவை செலவினங்களுக்கு ரூ.903 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ.558.81 கோடி மக்களவைச் செயலகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.558.81 கோடியில் நாடாளுமன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் சன்சாத் தொலைக்காட்சிக்கான மானியமும் அடங்கும். அத்துடன் மக்களவைத் தலைவா் மற்றும் துணை தலைவரின் ஊதியம் மற்றும் படிகளுக்கு ரூ.1.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் மாநிலங்களவை செலவினங்களுக்கு ரூ.413 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மாநிலங்களவைத் தலைவா் மற்றும் துணை தலைவரின் ஊதியம் மற்றும் படிகளுக்கு ரூ.2.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.