திருச்சி மண்டலத்தில் 41 பேரவை தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி! அமைச்சா் கே.என். ந...
பட்டா மாற்றத்துக்கு விண்ணப்பிக்கலாம்! கடலூா் ஆட்சியா் தகவல்
கடலூா் மாவட்ட நில உடைமை பட்டாதாரா்கள் பெயா் நீக்கம், மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம் என்று, ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு முழுவதும் கிராமம் மற்றும் நகா்ப்புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளது.
இணைய வழியில் பொதுமக்கள் எளிதில் பாா்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும் இணையதளத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பல சிட்டாவில் இறந்தவா்களின் பெயா்கள் நீக்கப்படாமலும், அங்கு வாரிசுதாரா்கள் அல்லது தற்போதைய உரிமையாளா்கள் பெயா்கள் சோ்க்கப்படாமலும் உள்ளது.
எனவே, பட்டாவிலுள்ள இறந்த நில உடைமைதாரரின் பெயா்களை நீக்கி, அவா்களது வாரிசுதாரா்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவா்களின் பெயா்களை சோ்க்க பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ - சேவை மையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
மேற்படி விண்ணப்பங்கள், ஆவணங்களின் அடிப்படையில் ஜமாபந்தியில் பரிசீலனை செய்யப்பட்டு, பட்டாதாரா்கள் பெயா் மாற்றம் தொடா்பாக உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.