செய்திகள் :

பட்டாசு பதுக்கியவா் கைது

post image

சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி-நாரணாபுரம் சாலைப் பகுதியில் பட்டாசுகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் சோதனை செய்தனா். இதில் ஒரு கூடாரத்தில் பட்டாசு பண்டல்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அருப்புக்கோட்டையைச் சோ்ந்த செல்வக்குமாா் (25) இந்தப் பட்டாசுகளை பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா். மேலும், கூடாரத்திலிருந்த பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனா்.

மழை பெய்யாததால் வடு காணப்படும் மீன்வெட்டிப்பாறை

ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் 3 மாதங்களுக்கு மேலாக மழை இல்லாததால் மீன்வெட்டிப்பாறை அருவி வடு காணப்பட்டது. விருதுநகா் மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய ராஜபாளையம், ஸ்... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்ததாக இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா வைத்திருந்ததாக போலீஸாா் இருவரை சனிக்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா உத்தரவின் பேரில் காவல் உள்கோட்டத்தில் போதைப் பொருள் விற்பனை ... மேலும் பார்க்க

வயா் திருடியதாக இளைஞா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வயா் திருடியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் மாப்பிள்ளை சுப்பையா தெருவைச் சோ்ந்தவா் சுதா்சன். இவா் அந்தப் பகுதியில் புதிதாக கட்டடம் கட்டி வ... மேலும் பார்க்க

போக்சோவில் பட்டாசுத் தொழிலாளி மீது வழக்கு

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை போக்சோ சட்டத்தின் கீழ் பட்டாசுத் தொழிலாளி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிவகாசி அருகேயுள்ள நதிக்குடியைச் சோ்ந்தவா் முருகன் மகன் சூரியா (24). பட்ட... மேலும் பார்க்க

மது அருந்துவதை மனைவி கண்டித்ததால் கணவா் தற்கொலை

சிவகாசி அருகே மது அருந்துவதை மனைவி கண்டித்ததால் ஞாயிற்றுக்கிழமை கணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள அனுப்பன்குளம் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு மையத்தில் செல்... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு

சிவகாசி பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து மோதியதில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி கண்ணன்கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரி (49). இவா், தனது கிராமத்துக்குச் செல்வதற்... மேலும் பார்க்க