கமலாலயத்தின் கருத்தைக் கூறும் எடப்பாடி பழனிசாமி! அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
பட்டாளம்மன் கோயிலில் குடமுழுக்கு
ஊத்தங்கரையை அடுத்த பட்டக்கானூா் சரட்டூரில் உள்ள பட்டாளம்மன் கோயில் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த 2-ஆம் தேதிமுதல் பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், புதன்கிழமை காலை கணபதி ஹோமம், சண்டி ஹோமம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடா்ந்து கலச புறப்பாடு நடைபெற்று, பட்டாளம்மன் ராஜகோபுர விமான கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது. பின்னா் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டனா்.