வங்தேசம்: ஷேக் ஹசீனா ஆட்சியில் தோ்தல் முறைகேடு குறித்து விசாரணை
பணக்கார முதல்வர்களில் ஒருவராக முயல்கிறார் அசாம் முதல்வர்: கௌரவ் கோகோய்
நாட்டின் பணக்கார முதல்வர்களில் ஒருவராக அசாம் முதல்வர் இடம்பிடிக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோய் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரின் எக்ஸ் பதிவில்,
இந்தியாவின் வளர்ச்சியில் முதல் 5 மாநிலங்களில் அசாம் ஒன்றாக இருக்கும் என்று சர்மா உறுதியளித்தார். ஆனால் முதல் ஐந்து பணக்கார முதல்வர்களின் ஒருவராகும் நோக்கத்தில் அவர் செயல்படுகிறார்.
ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் பகிர்ந்துள்ள முதல் 10 பணக்கார முதல்வர்க்ளின் பட்டியலில் வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்த நான்கு தேசியவாத காங்கிரஸ் முதல்வர்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அவர்களின் மாநிலங்கள் மனித வளர்ச்சிக் குறியீட்டுத் தரவரிசையில் பின்தங்கியுள்ளதாக மக்களவையில் காங்கிரஸ் தலைவர் கூறினார்.
பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பணக்காரர் வரிசையில் 7வது இடத்திலும், அசாம் யுஎன்டிபி குறியீட்டில் 31-வது இடத்திலும் உள்ளார்.
பாஜக அரசு வாக்குறுதி அளித்த வளர்ச்சி இதுதானா? என்று கோகோய் கேள்வி எழுப்பியுள்ளார்.