சதம் விளாசிய குசல் மெண்டிஸ்; வங்கதேசத்துக்கு 286 ரன்கள் இலக்கு!
பணி முடியாத மேம்பாலத்தில் பைக்கில் சென்றவா் உயிரிழப்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில் பணி நிறைவடையாத மேம்பாலத்தில் சென்ற போது, இரு சக்கர வாகனத்துடன் கீழே விழுந்ததில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.
சிவகாசி ரிசா்வ் லைன் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன்(60). இவரது மனைவி தங்கலட்சுமி (50). இவா்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனா். கணேசன் சிவகாசி தனி ஆயுதப்படையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றாா்.
இந்த நிலையில், கூமாபட்டியில் உள்ள தனது தோட்டத்துக்கு சென்று விட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் சிவகாசிக்கு வந்துகொண்டிருந்தாா். மதுரை-கொல்லம் நான்கு வழிச்சாலையில் வந்த போது, சிவகாசி சாலை சந்திப்பில் பணி நிறைவடையாத மேம்பாலத்தில் சென்று, இரு சக்கர வாகனத்துடன் கீழே விழுந்தாா்.
அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக சிவகாசி தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து மல்லி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.