Italy: விமானத்தின் இஞ்சினால் உள்ளிழுக்கப்பட்ட நபர் உயிரிழப்பு; நிறுத்தப்பட்ட விம...
மருத்துவருக்கு கத்திக்குத்து
ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பெருமாள்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் பாபு (50). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறாா். மேலும், சின்னக்கடை பஜாா் பகுதியில் மாலை நேரத்தில் தனியாக கிளினிக் நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில், ரமேஷ்பாபு திங்கள்கிழமை இரவு கிளினிக்கை பூட்டிய போது, மா்ம நபா் அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடினாா். இதில் பலத்த காயமடைந்த ரமேஷ்பாபு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அவரை கத்தியால் குத்திய ராஜபாளையம் ஆவரம்பட்டியை சோ்ந்த பாண்டிகணேஷ் (31) என்பவரை பிடித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.