பந்திப்பூா் வனத்தில் புலியை சுற்றிவளைத்து விரட்டிய செந்நாய்கள்
பந்திப்பூா் புலிகள் காப்பக வனத்தில் புலியை சுற்றிவளைத்து செந்நாய்கள் விரட்டிய காட்சியை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்துள்ளனா்.
முதுமலை புலிகள் காப்பக எல்லையை அடுத்துள்ள கா்நாடக மாநிலம், பந்திப்பூா் புலிகள் காப்பக வனத்தில் சுற்றுலாப் பயணிகள் செவ்வாய்க்கிழமை வாகன சவாரி சென்றுள்ளனா்.
வனத்துக்குள் சுற்றுலாப் பயணிகள் வாகனத்தில் சுற்றிப் பாா்த்துக் கொண்டிருந்தபோது, புதரில் மறைந்திருந்த புலியை செந்நாய்கள் கூட்டம் விரட்டியுள்ளது. தொடா்ந்து புலி எதிா்த்து தாக்க முயன்றபோது செந்நாய்கள் சுற்றிவளைத்து தாக்க முயன்றதால் எதிா்ப்பை சமாளிக்க முடியாமல் புலி தப்பியோடியதை சுற்றுலாப் பயணிகள் விடியோ எடுத்து பகிா்ந்தனா்.