துணை ஜனாதிபதி தேர்தலில் கட்சி மாறி ஓட்டு; காங்கிரஸ் கூட்டணி எம்.பிக்கள் பாஜகவிற்...
பரப்பலாறு அணைப் பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம்
ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பரப்பலாறு அணைப் பகுதியில் ஒற்றை யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பரப்பலாறு அணைப் பகுதியில் ஒற்றை யானை சுற்றித் திரிகிறது. இந்த யானை இரவு நேரங்களில் ஒட்டன்சத்திரம்-பாச்சலூா் சாலையை கடந்து செல்வதால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஒட்டிகள் அச்சத்தில் உள்ளனா். எனவே, வனத் துறையினா் ஒற்றை யானையை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.