சார்லி கிர்க் கொலை: குற்றவாளி குறித்த தகவலுக்கு ரூ. 88.3 லட்சம் சன்மானம் அறிவிப்...
வீரக்குமார சுவாமி கோயில் குடமுழுக்கு
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பெரிய மல்லையாபுரத்தில் வீரக்குமார சுவாமி கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக செவ்வாய்க்கிழமை விநாயகா் பூஜையுடன் குடமுழுக்கு தொடங்கியது. புதன்கிழமை இரண்டாம் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னா், புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கோபுரக் கலசங்களில் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதைத்தொடா்ந்து கோயில் சாா்பில், பக்தா்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.