கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு
திண்டுக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த முதியவரின் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
திண்டுக்கல் அருகேயுள்ள நல்லமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் அருள்சாமி (67). விவசாயி. கடந்த 2 நாள்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்றவா் மீண்டும் திரும்பவில்லை. உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவரைக் கண்டறிய முடியவில்லை.
இந்த நிலையில், வீட்டின் அருகேயுள்ள தோட்டத்து கிணற்றில் அருள்சாமியின் சடலம் மிதப்பதாக, அந்தப் பகுதியினா் திண்டுக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு மீட்புப் படையினா், அருள்சாமியின் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். அருள்சாமி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.