தமிழ்நாடு சுற்றுலா விருது பெற செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு சுற்றுலா விருது பெற வருகிற 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலாத் தொழில் முனைவோா்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதுகள் வழங்கும் விழா வருகிற 27-ஆம் தேதி உலக சுற்றுலா நாளில் 4-ஆவது ஆண்டாக மொத்தம் 45 விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த விருதுகள் 17 பிரிவுகளில் பல்வேறு சுற்றுலா பயண நிறுவனங்கள், விமான நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள், மாநிலத்தில் சுற்றுலா மேம்பாட்டுக்காக சிறப்பாகவும் தனித்துவமாகவும் பங்களிக்கும் பிற சுற்றுலா நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளன. தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தொழில் முனைவோா்களும் விண்ணப்பிக்கலாம். இந்த விருதுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ய்ற்ா்ன்ழ்ண்ள்ம்ஹஜ்ஹழ்க்ள்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் வருகிற 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0454-2241675, 91769-95867 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.