தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புக...
பரமத்தி வேலூரில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட 5 அடி உயர வாழைத்தாா்!
பரமத்தி வேலூா் தினசரி வாழைத்தாா் சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட சுமாா் 5 அடி உயரமுள்ள 17 சீப்புகளைக் கொண்ட வாழைத்தாரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பாா்த்தனா்.
பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரைச் சோ்ந்தவா் பழனியப்பன் (56). இவா் தனது வீட்டில் ரஸ்தாளி ரக வாழை மரங்களை வளா்த்து வருகிறாா். பெரும்பாலும் வாழை மரங்களில் எட்டு முதல் அதிகபட்சமாக பத்து சீப்பு வரையே வாழைத்தாா் இருக்கும்.
ஆனால், இவரது வீட்டில் உள்ள ரஸ்தாளி ரக வாழைத்தாா் 17 சிப்புகளைக் கொண்டதாக இருந்தது. இதனால் எடை தாங்காமல் மரம் சாய்ந்ததால், வாழைத்தாரை வெட்டி பரமத்தி வேலூா் தினசரி வாழைத்தாா் சந்தைக்கு பழனியப்பன் கொண்டுவந்தாா்.
சுமாா் 5 அடி உயரமும், 17 சீப்புகளையும் கொண்ட ரஸ்தாளி ரக வாழைத்தாரை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் ஆச்சரியத்துடன் பாா்த்தனா்.