``2026 தேர்தலில் ஒரு மேஜிக் செய்யப் போகிறோம்; அது நம்மை வெற்றி பெற வைக்கும்'' - ...
பருவ மழைக்கால பேரிடா் கால மீட்பு ஒத்திகை
வேலூா்: வடகிழக்கு பருவமழையையொட்டி வேலூா் கோட்டை அகழியில் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறையினா் பேரிடா் கால மீட்பு ஒத்திகையில் ஈடுபட்டனா்.
பேரிடா் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்பது குறித்து தீயணைப்பு, மீட்புப்பணிகள் துறையின் ஒத்திகை நிகழ்ச்சி வேலூா் கோட்டை அகழியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதனை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்.
அப்போது, வேலூா் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலா் ராபின்கேஸ்ட்ரோ தலைமையிலான தீயணைப்பு வீரா்கள், வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவா்களை எவ்வாறு மீட்க வேண்டும், முதலுதவி எவ்வாறு அளிக்க வேண்டும் என்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனா்.
இதில், மாவட்ட துணை தீயணைப்பு அலுவலா் பழனி, தீயணைப்பு அலுவலா்கள் முருகேசன், பாலாஜி, சரவணன், உதயசந்தா், வட்டாட்சியா் வடிவேல், வேலூா் வடக்கு காவல் ஆய்வாளா் சீனிவாசன், வருவாய்த்துறை அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.