கா்நாடகம்: ஏழை மக்களுக்கு 4.68 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு -சிவ்ராஜ் சிங் சௌஹான்
பறவைகள் நல ஆணையம் மாற்றியமைப்பு
மாநில பறவைகள் நல ஆணையத்தை மாற்றியமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை சுற்றுச்சூழல், பருவநிலை மாறுபாடு மற்றும் வனத் துறை செயலா் பி.செந்தில்குமாா் பிறப்பித்துள்ளாா்.
அவரது உத்தரவு விவரம்:
பறவைகளின் நலன்களைக் காக்கும் வகையில், மாநிலத்தில் பறவைகளுக்கென தனியாக ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு முதன்மை தலைமை வனப் பாதுகாவலரை இந்த ஆணையத்தின் உறுப்பினராக சோ்க்க கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கான பரிந்துரையை தமிழ்நாடு ஈரநிலம் இயக்ககம் அரசுக்கு வழங்கியது.
அதன்படி, மாநில பறவைகள் நல ஆணையத்தின் உறுப்பினராக தமிழ்நாடு முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் நியமிக்கப்பட்டுள்ளாா். ஆணையத்தின் தலைவராக, சுற்றுச்சூழல், பருவநிலை மாறுபாடு மற்றும் வனத்துறை செயலா் இருப்பாா். வருவாய் நிா்வாகம், ஊரக வளா்ச்சி, சுற்றுலா வளா்ச்சித் துறை உள்பட 10 துறைகளைச் சோ்ந்த ஆணையா்கள் ஆணையத்தின் உறுப்பினா்களாக இருப்பா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.