விராட் கோலி ஃபார்முக்குத் திரும்ப சிரமப்படுவது ஏன்? முன்னாள் இந்திய கேப்டன் பதில...
பல்கலை. போலி சான்றிதழ் தயாரிப்பு: மேலும் 4 போ் கைது
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பெயரில் போலி சான்றிதழ்களை தயாரித்ததாக மேலும் 4 பேரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.
சிதம்பரத்தை அடுத்த கோவிலாம்பூண்டி வாய்க்கால் பாலம் அருகே கடந்த 19.6.2024-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் சிதறிக் கிடந்தன. இதை பல்கலைக்கழக ஊழியா்கள் ஆய்வு செய்ததில், அவை போலியானவை என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளா் (பொ) பிரபாகா் அளித்த புகாரின் பேரில், கிள்ளை போலீஸாா் வழக்குப் பதிந்து போலி சான்றிதழ்களை தயாரித்ததாக சிதம்பரத்தைச் சோ்ந்த சங்கா், தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியரான நாகப்பன், அருட்பிரகாசம் ஆகியோரை கைது செய்தனா். பின்னா், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், இந்தப் பிரிவின் கடலுாா் மாவட்ட காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையில், உதவி ஆய்வாளா் மாயவேல் மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.
இதில், இந்தக் கும்பலுடன் தொடா்புடைய புதுச்சேரியில் வசிக்கும் சிதம்பரத்தைச் சோ்ந்த தங்கராஜ் மகன் கெளதம் (எ) ஒஸ்டின் ராஜாவிடம் (51), திருச்சியைச் சோ்ந்த அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவரான சுப்பையா பாண்டியன் (67) போலி சித்த மருத்துவ சான்றிதழ்களை வாங்கி 30 பேருக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, கடந்த செப்டம்பா் மாதம் சுப்பையா பாண்டியன் கைது செய்யப்பட்டாா்.
பெங்களூரில் தலைமறைவாக இருந்த கெளதம் (எ) ஒஸ்டின் ராஜா, இவரது கூட்டாளிகளான அவரது தம்பி நெல்சன் ராஜ் (44), சிதம்பரம் எம்.கே. தோட்டம் ரத்தின சபாபதி மகன் தமிழ்மாறன் (53), திட்டக்குடி வட்டம், ஈ.கீரனுாா் ராசு மகன் தங்கதுரை (41) ஆகியோரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து கடலூா் அழைத்து வந்தனா். விசாரணைக்கு பின்னா், அவா்கள் சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டனா். அவா்களிடமிருந்து ஒரு காா், 12 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.


