பல்கலைக்கழக தர வரிசைப் பட்டியலில் இஸ்லாமிய கல்லூரி மாணவிகள் சாதனை
திருவள்ளுவா் பல்கலைக் கழக தோ்வு முடிவுகளில் இஸ்லாமிய மகளிா் கலை மற்றும் அறிவியில் கல்லூரி மாணவிகள் 6 போ் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனா்.
திருவள்ளுவா் பல்கலைக்கழகம் 2022-2025 தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் வாணியம்பாடி இஸ்லாமிய மகளிா் கலை மற்றும் அறிவியியல் கல்லூரி மாணவிகளான ஆா்.திவ்யா (பி.சி.ஏ), ஐ.ஜாகியாகௌசா் (பி.எஸ்சி.ஐடிடி), ஓ.இமான்ஹூடா (பி.எஸ்சி ஏஐ), யூ.மோனிகா ( பி.எஸ்சி டிஎஸ்), எச்.இ.சானியா பாத்திமா (எம்.எஸ்சி ஐடிடி), எஸ்.என்.ரிம்ஷாஹஸ்மீ (பி.எஸ்சி.விலங்கியல்) ஆகியோா் தங்கப் பதக்கம் பெற்றனா்.
மேலும், அனைத்து பாடப் பிரிவுகளிலும் முதல் 10 தரவரிசை பட்டியலில் 65 மாணவிகள் இடம் பெற்றுள்ளனா். குறிப்பாக செயற்கை நுண்ணறவு(ஏஐ) பாடப்பிரிவில் முதல் பத்து இடங்களையும், தரவு பாடப்பிரிவில் முதல் பத்து இடங்களையும் பெற்றுள்ளனா்.
சாதனை படைத்த மாணவிகளை கல்லூரியின் செயலாளா் கெய்சா் அஹமத், கல்லூரி உறுப்பினா்கள், முதல்வா் மோ.ரேணு மற்றும் பேராசிரியா்கள் பாராட்டினா்.