காஸா மருத்துவமனை மீது தாக்குதல்; 5 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் பலி - நெதன்யா...
பல்லடத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச இளைஞா்கள் கைது
பல்லடத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச இளைஞா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூரில் மாவட்டத்தில் உள்ள பஞ்சாலை, பனியன் நிறுவனங்களில் ஏராளமான வடமாநிலத் தொழிலாளா்களும், வங்தேசத்தினரும் பணியாற்றி வருகின்றனா். அவா்கள் முறையான ஆவணங்கள் வைத்துள்ளனரா என பனியன் நிறுவனங்களில் போலீஸாா் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், பல்லடம் அருகேயுள்ள சேடபாளையம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் 2 போ் சுற்றித்திரிவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவா்களைப் பிடித்து பல்லடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில், அவா்கள் வங்கதேசத்தைச் சோ்ந்த சோகன் (29), நயம் உசேன் (27) என்பதும், உரிய ஆவணங்கள் இல்லாமல், அறிவொளி நகரில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, 2 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.