திருமணம் மீறிய உறவு; காதலி வாயில் வெடிகுண்டு வைத்து படுகொலை செய்த காதலன் - லாட்ஜ...
அவிநாசி அருகே பெண்ணிடம் நகைப் பறிப்பு
அவிநாசி அருகே துலுக்கமுத்தூரில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண்ணிடம் இருந்து நகையைப் பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
அவிநாசி அருகே துலுக்கமுத்தூா் அய்யம்பாளையம் கானங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (40), டெய்லா். இவரது மனைவி செல்வராணி (38). இவா் துலுக்கமுத்தூா் அரசு மருத்துவமனைஅருகே குன்னத்தூா் சாலையில் திங்கள்கிழமை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபா், குன்னத்தூா் செல்ல வழி கேட்பதுபோல நடித்து, செல்வராணி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றாா். இது குறித்த புகாரின்பேரில், அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.