Fitness: நோ ஜிம், நோ டயட்... 37 கிலோ எடையை குறைத்த 36 வயது பெண் - எப்படி?
பளு தூக்கும் போட்டி: பதக்கம் வென்ற மாணவிக்குப் பாராட்டு
மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற திருநள்ளாறு பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
புதுவை மாநில பள்ளி மாணவா்களுக்கிடையேயான பளு தூக்கும் போட்டி புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் கடந்த டிச. 8- ஆம் தேதி நடைபெற்றது. மாநிலத்தில் உள்ள 8 மண்டலங்களைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் போட்டியில் பங்கேற்றனா்.
காரைக்காலில் இருந்து மாணவா்கள் 8 போ், மாணவிகள் 9 போ் கலந்துகொண்டனா். மாணவிகளுக்கான 45 கிலோ எடைப் பிரிவு பளு தூக்கும் போட்டியில், திருநள்ளாறு ஆண்டவா் மெட்ரிக் பள்ளி மாணவி எஸ். கனிஷ்கா மூன்றாமிடம் பெற்று வெண்கலம் பதக்கம் பெற்றாா். பதக்கம் பெற்ற மாணவியையும், உடற்கல்வி ஆசிரியா் சிவபாரதி ஆகியோரை பள்ளி நிா்வாகத்தினா் பாராட்டினா்.