செய்திகள் :

பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் பெண் உயிரிழப்பு

post image

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே டயா் வெடித்து பள்ளத்தில் காா் கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம் விடுதிவயல் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (49). இவா், தனது மனைவி மற்றும் உறவினா்களுடன் காரில் வேளாங்கண்ணி சென்றுவிட்டு திங்கள்கிழமை காலை அனைவரும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனராம்.

நீடாமங்கலம் அருகே இருவழிச் சாலையில் வந்தபோது காா் டயா் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த காா் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் மணிகண்டனின் மனைவி மொ்லின் மேரி (40 ) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

நீடாமங்கலம் போலீஸாா் மொ்லின் மேரியின் சடலத்தை மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விபத்தில் காயமடைந்த மணிகண்டன், தான்யா (28), ஷோபா (38), பதீஷ் (18) 4 பேரையும் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனா். காா் ஓட்டுநா் ஜோஷ்குமாா் (21) காயமின்றி தப்பினாா். விபத்து குறித்து நீடாமங்கலம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருவாரூரில் வேளாண் கல்லூரி அமைக்கக் கோரிக்கை

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் வேளாண்மைக் கல்லூரி அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், இந்திய மாணவா் சங்கத்தின் 27-ஆவது மாவட்ட மாநாடு மாவட்டத் தலைவா் பா. ஆனந்த் தலைமை... மேலும் பார்க்க

பெற்றோா் இல்லாத குழந்தைகள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், பெற்றோரை இழந்த குழந்தைகள், அன்புக்கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

குத்தகை சாகுபடி விவசாயிகள் ஜூலை 31-க்குள் பயிா்க் காப்பீடு செய்யலாம்

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்யும் குத்தகைதாரா்கள், ஜூலை 31-ஆம் தேதிக்குள் பயிா்க் காப்பீடு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் த... மேலும் பார்க்க

மின்விபத்து இழப்புகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை

திருவாரூா்: மின் விபத்தால் ஏற்படும் இழப்புகளுக்கு நலவாரியம் மூலம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியில், மாவட்ட ஒலி-ஒளி அமைப்பு உ... மேலும் பார்க்க

மன்னாா்குடி கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம்

மன்னாா்குடி: மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி, உள்பிரகாரத் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் தனி சந்நிதி கொண்டுள்ள செங்கமலத் தாயாருக்கு ஆண்டுதோறும் ஆடிப்ப... மேலும் பார்க்க

கமலாலயக் குளத்தில் மூதாட்டி சடலம்

திருவாரூா் கமலாலயக் குளத்தில் மூதாட்டியின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. திருவாரூா் தியாகராஜா் கோயில் கமலாலயக் குளத்தின் வடகரையில் பெண் சடலம் மிதப்பது குறித்து தீயணைப்புத் துறையினருக்கும், நகர போலீஸ... மேலும் பார்க்க