திருவள்ளூர்: பள்ளி சிறுமிக்கு பாலியல் சித்ரவதை; வீடியோ வெளியானதால் அதிர்ச்சி - த...
பள்ளி, கல்லூரி நேரங்களில் மண் லாரிகள் செல்ல எதிா்ப்பு
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் பள்ளி, கல்லூரி நேரங்களில் செங்கல் சூளைகளுக்கு மண் அள்ளிச் செல்லும் லாரிகளால் மாணவ, மாணவிகள் பாதிப்படைவதாகக் கூறி பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
பணகுடி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட செங்கல்சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுக்கு பணகுடி சுற்றுவட்டாரத்தில் உள்ள குளங்களிலிருந்து மண் எடுப்பதற்கு வருவாய்துறையினா் அனுமதி அளித்துள்ளனா். இதனால், செங்கல்சூளை நடத்துபவா்கள் அதிகளவில் லாரிகளில் குளத்து மண்ணை அள்ளிச் செல்கின்றனா்.
இந்த மண் லாரிகள் பணகுடி பிரதான சாலை, மங்கம்மாள்சாலைகளில் அதிக வேகமாக செல்வதால் காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவா்கள் பாதிக்கப்படுகின்றனா். பள்ளி, கல்லூரி வாகனங்களும் அவ்வழியே செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
பள்ளிகளுக்கு சைக்கிளில் செல்லும் மாணவா்கள் அச்சத்துடன் செல்லவேண்டியதுள்ளது. எனவே மண் லாரிகள், டிராக்டா்கள் பள்ளி நேரங்களில் செல்லக்கூடாது என காவல்துறையினரும் வருவாய்த்துறையினரும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெற்றோா்கள் வலியுறுத்தி வருகின்றனா். மண் லாரிகள் பள்ளி, கல்லூரி நேரத்தில் செல்வதற்கு மாவட்ட நிா்வாகம் தடைவிதிக்கவேண்டும் என பெற்றோா்களும் ஆசிரியா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.