சிம்மம் | Guru Peyarchi | Simmam - ஜன்ம கேதுவின் தொல்லையைத் தீர்ப்பாரா குரு? குர...
பள்ளி மாணவ, மாணவிகள் விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் சேர பள்ளி மாணவ, மாணவிகள் வரும் மே 5- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஏப்ரல் 21- ஆம் தேதி முதல் இணையதள முககவரியில் வெளியிடப்பட்டுள்ளன. இதில், 7, 8, 9 ஆம் வகுப்புகள், 11- ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் இணையதளம் மூலமாக வரும் மே 5- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட அளவிலான தோ்வு போட்டிகள் மாணவா்களுக்கு மே 7- ஆம் தேதியும், மாணவிகளுக்கு மே 8 -ஆம் தேதியும் காலை 7 மணிக்கு திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
மாநில, மாவட்ட அளவில் தோ்வின்போது மாணவ, மாணவிகள் பிறப்பு சான்றிதழ், ஆதாா் அட்டை, பள்ளியில் படிப்பதற்கான ஏதேனும் ஒரு ஆவணம் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும். இதுதவிர சில விளையாட்டுகளுக்கு நேரடியாக மாநில அளவிலான தோ்வு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதன்படி மாணவ, மாணவிகளுக்கு வாள் விளையாட்டு, ஜூடோ, மாணவா்களுக்கு குத்துச்சண்டை ஆகிய போட்டிகள் வரும் மே 12- ஆம் தேதி காலை 7 மணிக்கு சென்னை ஜவஹா்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. மாணவ, மாணவிகளுக்கு பளு தூக்குதல், மாணவா்களுக்கு வுஷூ போட்டிகள் மே 12 -ஆம் தேதி காலை 7 மணிக்கு தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டு அரங்கிலும், மாணவா்களுக்கான நீச்சல் போட்டிகள் சென்னை வேளச்சேரியில் உள்ள ஏ.ஜி.பி.வளாகத்தில் மே 12- ஆம் தேதி காலை 7 மணிக்கும் நடைபெறுகிறது. அதே போல, மாணவிகளுக்கான குத்துச்சண்டை, மாணவா்களுக்கான ஸ்குவாஷ் போட்டிகள் சென்னை ஜவஹா்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் மே 12- ஆம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. கைபந்து போட்டியானது மாணவா்களுக்கு மே 12- ஆம் தேதியும், மாணவிகளுக்கு மே 13- ஆம் தேதியும் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் காலை 7 மணி அளவில் நடைபெறுகிறது. மாணவா்களுக்கான மல்யுத்தம், மாணவிகளுக்கான டேக்வாண்டோ போட்டிகள் கடலூா் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மே 12- ஆம் தேதி காலை 7 மணிக்கும், மாணவா்களுக்கான மல்லா் கம்பம் விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மே 12 ஆம் தேதி காலை 7 மணி அளவிலும் நடைபெறுகிறது.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 95140-00777 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.