பள்ளிகளில் இனி கடைசி பெஞ்ச் கிடையாது!
கேரளத்தின் சில பள்ளிகளில் இருக்கை அமைப்பு முறை மாற்றப்பட்டுள்ளதால், கடைசி இருக்கை என்ற ஒன்று இனி கிடையாது.
பள்ளிகளில் வரிசையாக அமைக்கப்பட்ட இருக்கைகளில் மாணவர்கள் அமர்வதால், கடைசி இருக்கையில் அமரும் மாணவர்களுக்கு கவனச் சிதறல் அல்லது சுணக்கம் ஏற்படுவது மறுக்கமுடியாத ஒன்றாகவே உள்ளது. இந்த நிலையை மாற்றும்வகையில், வகுப்புகளின் இருக்கைகளை வரிசையாக அமைக்கப்படுவதற்கு பதிலாக, யு (U) வடிவில் இருக்கைகள் அமைக்கப்படுவது போன்று ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன் என்ற திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
இவ்வாறான அமைப்பிலான இருக்கைகளில் மாணவர்கள் அமர்த்தப்பட்டால், மாணவர்கள் அனைவரின் மீதும் ஆசிரியரின் பார்வையில் கவனம் செலுத்தப்படும் என்றும், அனைவருக்கும் பாடம் புரிய வைக்கப்படும் என்றும் படத்தின் காட்சியில் தெரியப்படுத்தினர்.
இந்த நிலையில், ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன் படத்தின் காட்சிகளை, கேரளத்தின் சில பள்ளிகள் செயல்படுத்தத் துவங்கிவிட்டன. வகுப்பினுள் வலது, இடது மற்றும் எதிர்ப்புறம் என 3 புறமும் இருக்கைகள் அமைக்கப்பட்டு, அவையின் நடுவே ஆசிரியரின் மேசை அமைக்கப்படுவது அல்லது பாடம் எடுப்பதுபோன்று செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:75 வயதில் ஓய்வுபெற வேண்டும்! பிரதமர் மோடியைச் சொல்கிறாரா ஆர்எஸ்எஸ் தலைவர்?