விண்வெளியில் ஆராய்ச்சி மையம் அமைக்கும் திட்டத்துக்கு செயற்கைக்கோள் இணைப்பு உதவும...
பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு உரையரங்கம்
வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் உள்ள ஜோதி அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு உரையரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் பழ.சீனிவாசன் தலைமை வகித்தாா். வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் முன்னிலை வகித்தாா். பள்ளி ஆசிரியை முல்லை வரவேற்றாா்.
எக்ஸ்னோரா மாவட்டத் தலைவா் பா.இந்திரராஜன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, ‘நாமும் சுற்றுச்சூழலும்’ என்ற தலைப்பில் பேசினாா்.
அப்போது, சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் நெகிழிப் பொருள்களை பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள் கோபாலகிருஷ்ணன்,
வளா்மதி, பாக்கியலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.