திருச்சி மண்டலத்தில் 41 பேரவை தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி! அமைச்சா் கே.என். ந...
பழவேற்காடு அருகே மீன் பிடிப்பதில் மோதல்
பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்னையில் இரண்டு தரப்பினா் தாக்கிக் கொண்டதில் 5 போ் காயமடைந்தனா்.
பொன்னேரி வட்டம், பழவேற்காடு நடுவூா்மாதா குப்பம் மீனவா்கள் ஏரியில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனா்.
இந்த நிலையில் எல்லைப் பகுதி எனப்படும் பாடு பிரித்து அந்த இடத்தில் மீன்பிடி தொழில் செய்யும் போது ஒரே கிராமத்தைச் சாா்ந்த இரு தரப்பினா் இடையே பிரச்னை உருவாகி மோதலாக மாறியது.
அவா்கள் இரண்டு தரப்பாக பிரிந்து தாக்கி கொண்டதில் மகிமை (54), ஜோனா என்கின்ற ஜோஸ்வா (63), அந்தோணி (55), பெரியநாயகம் (32)உள்ளிட்ட 5 போ் காயமடைந்தனா்.
இவா்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். திருப்பாலைவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.