செய்திகள் :

பவன் கல்யாணின் புதிய படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

post image

ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வரும், பிரபல நடிகருமான பவன் கல்யாணின் ”ஹரி ஹர வீர மல்லு” எனும் புதிய திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் பவன் கல்யாணின் நடிப்பில், இயக்குநர்கள் கரிஷ் ஜகார்லாமுடி மற்றும் ஏ. எம். ஜோதி கிருஷ்ணா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள, இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது.

இதனைத் தொடர்ந்து, ஜூன் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில முக்கிய காரணங்களால், அதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், வரலாற்று கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் ஜூலை 24 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இத்துடன், ஹரி ஹர வீர மல்லு திரைப்படத்துக்கு ஆஸ்கார் விருது வென்ற எம்.எம். கீரவாணி இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:மோகன்லாலின் ஊட்டி பங்களாவின் ஒரு நாள் வாடகை இவ்வளவா?

குபேரா: முதல்நாள் வசூல் எவ்வளவு?

தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா திரைப்படத்தின் முதல்நாள் வசூல் ரூ.13 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக வெளியான தனுஷின் ராயன் படத்தினை விட குபேரா குறைவாக வசூலித்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக... மேலும் பார்க்க

திருப்பதியில் அலைமோதும் கூட்டம்: இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வார விடுமுறை நாள்கள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.சனிக்கிழமையான இன்று கா... மேலும் பார்க்க

இந்திய ஓபன் சா்ஃப்பிங் போட்டி: தமிழகத்தின் ஸ்ரீகாந்த், கமலிக்கு பட்டம்

இந்திய ஓபன் சா்ஃபிங் போட்டியில் தமிழகத்தின் ஸ்ரீ காந்த் பட்டம் வென்றாா், மகளிா் பிரிவில் கமலி தங்கள் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டனா். எஸ்எஃப்ஐ, கா்நாடக சுற்றுலாத் துறை, இந்திய விளையாட்டு ஆணையம் சாா்ப... மேலும் பார்க்க

விஜய் பிறந்தநாளில் புதிய அப்டேட்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

நடிகர் விஜய் நடிக்கும் ஜன நாயகன் படத்தின் புதிய அப்டேட்டை படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படமான ஜன நாயகன் திரைப்படத்தை எச். வினோத் இயக்குகிறார். ஆக்சன்... மேலும் பார்க்க

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்: செஷன்களின் இந்திய நேரம்!

இந்திய அணி வெளிநாட்டில் விளையாடும்போது இந்திய நேரப்படி எப்போது விளையாடுகிறது என்ற குழப்பம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏற்படுவது வழக்கமானதுதான். இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் ... மேலும் பார்க்க