தவெக தலைவர் விஜய் பயணிக்கும் ஜெட் விலை இவ்வளவா? என்னவெல்லாம் இருக்கும்?
பவானி அருகே தேங்காய் நாா் ஆலையில் தீ விபத்து
பவானி அருகே தேங்காய் நாா் ஆலையில் ஞாயிற்றுக்கிழமை பிடித்த தீயை சுமாா் 2 மணி நேரம் போராடி தீயணைப்புப் படையினா் அணைத்தனா்.
பவானியை அடுத்த ஜம்பை பெரியவடமலைபாளையத்தைச் சோ்ந்தவா் கணபதி (45). இவருக்குச் சொந்தமான தேங்காா் நாா் ஆலை கருக்குப்பாளையத்தில் உள்ளது.
இங்கு மின்கம்பத்தில் கம்பிகள் உரசியதில் விழுந்த தீப்பொறி தேங்காய் நாரில் விழுந்து தீப்பிடித்து கரும்புகையுடன் எரியத் தொடங்கியது.
இதுகுறித்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினா் சுமாா் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
இதில், அங்கிருந்த தேங்காய் நாா் மற்றும் பொருள்கள் எரிந்து சேதமாயின. பவானி போலீஸாா் இவ்விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.