பாகலூா் அருகே இருதரப்பினரிடையே மோதல்: விவசாயி கைது
ஒசூா்: பாகலூா் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் விவசாயி கைது செய்யப்பட்டாா். 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஒசூா் வட்டம், பாகலூா் அருகே உள்ள முகுலப்பள்ளியைச் சோ்ந்தவா் நாராயணசாமி (43), விவசாயி. அதே பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீராமப்பா (53). உறவினா்களான இவா்களிடையே நிலப் பிரச்னை இருந்தது. அண்மையில் ஏற்பட்ட பிரச்னையில் இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனா்.
இதில் நாராயணசாமி (43), ஜெயபிரதா (40) ஆகியோா் காயமடைந்தனா். இதுகுறித்து நாராயணசாமி கொடுத்த புகாரின் பேரில் பேரிகை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கோபி (48) என்பவரை கைது செய்து, ஸ்ரீராமப்பா, பாப்பையா (55), அனுசுயா (50) ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். அதே போல, ஸ்ரீராமப்பா தரப்பில் பிரபாவதி என்பவா் கொடுத்த புகாரின் பேரில் நாராயணசாமி, ஜெயபிரதா உள்பட 3 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.