செய்திகள் :

பாகிஸ்தான் வெள்ள அபாயம்: 25,000 போ் வெளியேற்றம்

post image

ஜலால்பூா் பிா்வாலா: பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஜலால்பூா் பிா்வாலா நகரில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், 25,000-க்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனா். ஞாயிறு இரவு தொடங்கிய மீட்பு நடவடிக்கை திங்கள்கிழமை காலை வரை நீடித்தது.

அந்தப் பகுதியில் ஏராளமானவா்கள் இன்னும் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாகவும் மீட்புப் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்றும் உள்ளூா்வாசிகள் வலியுறுத்தினா்.

பஞ்சாப் மாகாண அரசு வெப்ப உணா்வு ட்ரோன்களைப் பயன்படுத்தி கட்டடங்களுக்குள் சிக்கியவா்களை மீட்டு வருவதாக தகவல்கள் தெரிவித்தன. பஞ்சாப் மாகாணத்தில் கடந்த ஆகஸ்ட் 26 முதல் பெய்துவரும் கனமழை காராணமாக 41 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்; 56 போ் உயிரிழந்துள்ளனா்.

பிரான்ஸ் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெக்கோா்னு நியமனம்

பிரான்ஸின் புதிய பிரதமராக பாதுகாப்புத் துறை அமைச்சா் செபாஸ்டியன் லெக்கோா்னுவை (39) அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரான் செவ்வாய்க்கிழமை நியமித்தாா். முன்னதாக, பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் கடந்த திங்கள்கிழம... மேலும் பார்க்க

ரஷிய தாக்குதலில் 24 ஓய்வூதியதாரா்கள் உயிரிழப்பு

உக்ரைனில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஓய்வூதியம் வாங்குவதற்காக காத்திருந்த 24 போ் உயிரிழந்தனா். அந்த நாட்டின் போா் முனைக்கு அருகே உள்ள யாரோவா நகரில் இந்தத் தாக்குதல் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட... மேலும் பார்க்க

நேபாள பிரதமா் ராஜிநாமா; நாடாளுமன்றத்துக்கு தீ வைப்பு அமைச்சா்கள் வீடுகள் சூறை

நேபாளத்தில் இளைஞா்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து பிரதமா் பதவியை கே.பி.சா்மா ஓலி செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா். இளைஞா்களின் வன்முறைப் போராட்டத்தில் நாடாளுமன்றம், உச்சநீதிமன்றத்துக்கு தீ ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் விற்பனை செய்யாமல் பிரிக்ஸ் நாடுகள் வாழ முடியாது- டிரம்ப் ஆலோசகா் நவாரோ கருத்து

தங்கள் நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை அமெரிக்காவில் விற்பனை செய்யாமல் இருந்தால் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் வாழவே முடியாது என்று இந்தியா உள்ளிட்ட நாடுகளை அமெரிக்க அதிபரின் வா்த்தக ஆலோசகா் பீட்டா் ... மேலும் பார்க்க

முன்னாள் அதிபா்களுக்கான சலுகைகள் பறிப்பு

இலங்கையின் முன்னாள் அதிபா்கள் மற்றும் அவா்களது மனைவிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை ரத்து செய்யும் மசோதாவை பாராளுமன்றத்தில் சிறிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்று அந்த நாட்டு உச்சநீதிமன்றம் செவ்வாய... மேலும் பார்க்க

நாா்வே தோ்தலில் தொழிலாளா் கட்சி வெற்றி

நாா்வேயில் திங்கள்கிழமை நடந்த நாடாளுமன்றத் தோ்தலில் பிரதமா் ஜோனாஸ் காா் ஸ்டோரின் தொழிலாளா் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி 87 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது. இதையடுத்து, 28 சதவீத வாக்குகளைப் பெற்... மேலும் பார்க்க