பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸி. ஆதிக்கம்! இந்தியா 369 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதில், நிதீஷ் குமார் ரெட்டி சதமடித்ததன் காரணமாக இந்திய அணி கௌரவமான ஸ்கோரை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இப்போது அந்த அணி 270 ரன்கள் முன்னிலையுடன் இரண்டவது இன்னிங்சை தொடர்கிறது.
நான்காம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
கடைசி மற்றும் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் நாளை இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சை தாக்குப்பிடித்து ஆட்டமிழக்காமல் இருந்தால் 4-ஆவது டெஸ்ட் போட்டியும் டிராவில் முடிய வாய்ப்புள்ளது. இன்னொருபுறம், இந்திய அணி விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றி பெறும் முனைப்பில் ஆஸ்திரேலியா உள்ளதால் நாளைய ஆட்டம் கடும் சவாலானதாக இந்திய பேட்ஸ்மென்களுக்கு இருக்கப் போகிறது.