பாஜகவின் அனல் பறக்கும் 3வது தேர்தல் வாக்குறுதி!
தில்லியில் பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பாஜகவின் மூன்றாவது தேர்தல் வாக்குறுதியை அக்கட்சியின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ளார்.
தலைநகரில் பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5-இல் நடைபெறவுள்ளதையடுத்து, அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றப்போவது யார் என்ற போட்டி நிலவி வருகின்றது. நிகழவுள்ள பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாகத் தேர்தலை எதிர்கொள்கின்றனர்.
இந்த நிலையில், பேரவைத் தேர்தலில் ஈடுபட்டுள்ள கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், மக்களுக்கு செய்யப்போகின்றவற்றைப் பட்டியலிட்டு வருகின்றனர். ஏற்கனவே, இரண்டு பகுதிகளாகத் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட பாஜக இறுதிக்கட்ட தேர்தல் வாக்குறுதியை இன்று வெளியிட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை அமித் ஷா வெளியிட்டார்.
பாஜக வெளியிடுவது வெற்று வாக்குறுதிகள் அல்ல, தில்லியில் செய்யவேண்டிய பணிகளைப் பட்டியலிட்டுள்ளன.
யமுனையைச் சுத்தம் செய்தல், சுத்தமான குடிநீர் வழங்குதல் மற்றும் தில்லியை மாசு இல்லாததாக மாற்றுதல் போன்ற வாக்குறுதிகளை கேஜரிவால் நிறைவேற்றவில்லை என்று ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்ததைப் போல ஊழல் அளவு ஒருபோதும் இருக்காது. சாலைகள் அமைப்பதற்கு மத்திய அரசு ரூ.41,000 கோடி, ரயில் பாதைகள் அமைக்க ரூ.15,000 கோடி, தில்லியில் விமான நிலையத்திற்கு ரூ.21,000 கோடி செலவிட்டது.
ஏழைகளுக்கான எந்த நலத்திட்டங்களும் தில்லியில் நிறுத்தப்படாது, பாஜக தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும்.