செய்திகள் :

பாட்டல் ராதா டிரைலர்!

post image

குரு சோமசுந்தரம் நடித்த பாட்டல் ராதா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பா. இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார்.

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான ரஞ்சித், தொடர்ந்து இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு, ரைட்டர், சேத்துமான், குதிரைவால், நட்சத்திரம் நகர்கிறது, பொம்மை நாயகி, ஜே பேபி, தண்டகாரண்யம் உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார்.

தற்போது, பா. இரஞ்சித் தன் இணை இயக்குநரான தினகரன் சிவலிங்கம் இயக்கும் புதிய படத்தை தன் தயாரிப்பு நிறுவனம் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்துகிறார். இப்படத்திற்கு, ‘பாட்டல் ராதா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ‘தல வந்தா தள்ளிப்போகணும்...’ டிராகன் வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தற்போது, பா. இரஞ்சித் தன் இணை இயக்குநரான தினகரன் சிவலிங்கம் இயக்கும் புதிய படத்தை தன் தயாரிப்பு நிறுவனம் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்துகிறார். இப்படத்திற்கு, ‘பாட்டல் ராதா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

நாயகனாக குரு சோமசுந்தரமும், இவருக்கு ஜோடியாக சஞ்சனா நடராஜனும் முக்கிய கதாபாத்திரங்களில் பாரி இளவழகன் (ஜமா), ஜான் விஜய், மாறன், ஆண்டனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மதுப்பழக்கத்தால் சீரழியும் நாயகனின் கதையாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பாட்டல் ராதா படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். மதுப்பழக்கத்தால் சந்திக்கும் அவமானங்கள், இழப்புகள் என காட்சிகள் கவனம் ஈர்க்கின்றன.

நடிகா் ரவி - ஆா்த்தி விவாகரத்து வழக்கு: சமரச பேச்சுக்குப் பிறகு விசாரிக்கப்படும் -நீதிமன்றம்

நடிகா் ரவி மற்றும் அவரது மனைவி ஆா்த்தி விவகாரத்து வழக்கு சமரச பேச்சுவாா்த்தைக்குப் பிறகு விசாரிக்கப்படும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நடிகா் ரவி, தனது மனைவி ஆா்த்தியிடம் இருந்து வ... மேலும் பார்க்க

தமிழகத்தின் தொடா் வெற்றிக்கு ஹைதராபாத் முற்றுப்புள்ளி

ஹாக்கி இந்தியா லீக் தொடரில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணியின் தொடா் வெற்றிகளுக்கு 4-0 என்ற கோல் கணக்கில் முற்றுப்புள்ளி வைத்தது ஹைதராபாத் டுஃபான்ஸ். இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்ச... மேலும் பார்க்க

ஜேக் சின்னா், மொன்ஃபில்ஸ், ஸ்வியாடெக், ஸ்விட்டோலினா முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜேக் சின்னா், மூத்த வீரா் கேல் மொன்ஃபில்ஸ், மகளிா் பிரிவில் இகா ஸ்வியாடெக், ஸ்விட்டோலினா ஆகியோா் ரவுண்ட் 16 சுற்றுக்கு முன... மேலும் பார்க்க

ஹைதராபாத்-பெங்களூா் ஆட்டம் டிரா

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற ஹைதராபாத் எஃப்சி-பெங்களூரு எஃப்சி அணிகள் ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது. ஹைதராபாத் பாலயோகி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் ... மேலும் பார்க்க

ஐடிஎஃப் 50: அங்கிதா-பெயின்ஸ் சாம்பியன்

புது தில்லியில் நடைபெற்று வரும் ஐடிஎஃப் டபிள்யு 50 டென்னிஸ் போட்டி மகளிா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா-பிரிட்டனின் பெயின்ஸ் பட்டம் வென்றனா். ஒற்றையா் பிரிவில் முதல் சுற்றோடு வெளியேறி... மேலும் பார்க்க

உன்னி முகுந்தனை பாராட்டிய மோகன்லால்!

நடிகர் உன்னி முகுந்தன் நடித்த மார்கோ திரைப்படத்தை மோகன்லால் பாராட்டியுள்ளார்.இயக்குநர் ஹனிப் அதேனி இயக்கத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நடித்த மார்கோ திரைப்படம் கடந்த ஆண்டு டிச. 20 தேதி வெளியானது.அதிக வ... மேலும் பார்க்க