பாதியில் நிறுத்தப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடை பணி
வால்பாறை அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி ஓராண்டாகியும் நிறைவு பெறாமல் பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் நகராட்சி மூலம் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக பழுதடைந்த பயணிகள் நிழற்குடைகள் இடித்து புதிதாக கட்டப்படுகின்றன.
இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள வாகமலை எஸ்டேட் பகுதியில் நன்றாக இருந்த பயணிகள் நிழற்குடை கட்டடம் கடந்த ஓராண்டுக்கு முன்பு இடிக்கப்பட்டு ஒப்பந்ததாரா் மூலம் புதிய நிழற்குடை கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் பணிகள் முடிவடையாமல் பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளது. ஓராண்டாகியும் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.
எனவே, நகராட்சி அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி விரைவாக பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.