செஸ் விளையாட பிடிக்கவில்லை..! குகேஷிடம் மீண்டும் தோற்ற பிறகு கார்ல்சென் பேட்டி!
பாபநாசத்தில் திமுக பொதுக்கூட்டம்
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் திமுக நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரப் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
பாபநாசம் நகர திமுக இளைஞரணி சாா்பில் மேலவீதியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, நகர இளைஞரணி அமைப்பாளா் சண்.கோபி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் என். நாசா், நகரச் செயலாளா் ச. கபிலன், மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் ராஜா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், திமுக இளம் பேச்சாளா் ரகுநாத், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் மணிகண்டன், விஜய் பிரசாத், பாபநாசம் பேரூராட்சித் தலைவா் பூங்குழலி கபிலன், பாபநாசம் தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் மணிமாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக இளைஞரணி துணை அமைப்பாளா் கமலேஷ் வரவேற்றாா். நிறைவில் நகர இளைஞா் அணி துணை அமைப்பாளா் ராஜா நன்றி கூறினாா்.