பாபநாசம் அரசுப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா
பாபநாசம்: பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியா் ஜெகதீசன் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். விழாவில் 2024 - 2025 ம் ஆண்டு 10-ஆம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத் தோ்வுகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது.
விழாவில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கோ.துரை, பள்ளி மேலாண்மை குழு தலைவா் முத்துலட்சுமி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள் கஜலட்சுமி, காா்த்திகா, வாா்டு உறுப்பினா் பாலகிருஷ்ணன், கல்வியாளா் செங்குட்டுவன், ஓய்வுபெற்ற ஆசிரியா் இளங்கோவன், தமிழ் ஆசிரியா் ராதா, உதவி தலைமை ஆசிரியா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.