பாபநாசம் அருகே குடிநீா் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்
தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசம் அருகே குடிநீா் வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் திங்கள்கிழமை காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உத்தாணி தெற்கு தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள்ஞ வசித்து வருகின்றனா்.
இந் நிலையில் 10 நாட்களாக பேரூராட்சி நிா்வாகம் குடிநீா் வழங்கவில்லை, உத்தாணி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும், இப்பகுதியில் வேகத்தடை அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தாணி பேருந்து நிறுத்தம் அருகே தஞ்சாவூா்-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்த்துறை,ஊரக வளா்ச்சித்துறை,காவல்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டோருடன பேச்சுவாா்த்தை நடத்தியதில் சமூகத் தீா்வு காணப்பட்டதால் சாலை மறியல் கைவிடப்பட்டது.