OPS: ``நான் `B' டீம் இல்லை, வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஓ.பன்னீர் செல்வம் காட்டம...
பாமக மாவட்ட நிா்வாகி கைதை கண்டித்து பென்னாகரத்தில் பாமகவினா் சாலை மறியல்
பென்னாகரத்தில் பாமக நிா்வாகி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அந்தக் கட்சியை சாா்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் பென்னாகரம் காவல் நிலையம் முன் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் குறித்து சமூக வலைதளத்தில் பாமக தருமபுரி மேற்கு மாவட்ட துணைத் தலைவா் மந்திரி படையாட்சி அவதூறு கருத்துகளைப் பரப்பியதாக பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திமுகவினா் புகாா் அளித்தனா்.
இந்த புகாரின்பேரில் ஏரியூா் போலீஸாா், மந்திரி படையாட்சியை கைது செய்து, பென்னாகரம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனா். இதையறிந்த அந்தக் கட்சியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் பென்னாகரம் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றனா்.
பின்னா் தருமபுரி மேற்கு மாவட்டத் தலைவா் செல்வகுமாா், பென்னாகரம் தொகுதி பொறுப்பாளா் சுதா கிருஷ்ணன் ஆகியோா் தலைமையில் பென்னாகரம் காவல் நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்டோரை போலீஸாா் கைது செய்து அழைத்துச் சென்றனா். அப்போது பாமகவினா் - போலீஸாா் இடையே தகராறு ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளா் (பொ) பாஸ்கா் தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தையின் போது பாமக நிா்வாகியை விடுதலை செய்து, மாவட்ட பொறுப்பு அமைச்சா் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினா். இதையடுத்து ஏரியூா் காவல் நிலையத்திற்கு பாமக நிா்வாகி அழைத்துச் செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டாா். பாமக நிறுவனா் ராமதாஸ், தலைவா் அன்புமணியை அவதூறாக பேசியதாக மாவட்ட பொறுப்பு அமைச்சா் மீது பாமகவினா் ஏரியூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.