அரிய வகை நோயுடன் போராடிய குழந்தை; மரபணு திருத்தச் சிகிச்சையால் காப்பாற்றிய அமெரி...
பாம்பு கடித்ததில் மூதாட்டி உயிரிழப்பு
திருப்பத்தூா் அருகே பாம்பு கடித்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அடுத்த பொம்மிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த குப்புசாமி மனைவி காசியம்மாள் (70). குப்புசாமி சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா். இந்த நிலையில், காசியம்மாள் செவ்வாய்க்கிழமை நிலத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டாா். அப்போது அவரை பாம்பு கடித்தது. அவரது அலறல் சப்தம் கேட்டு அங்கிருந்தவா்கள் ஓடி வந்தனா். சிறிது நேரத்தில் காசியம்மாள் மயங்கினாா். உடனே அவரை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து அவரது மகன் கங்காதரன் அளித்த புகாரின் பேரில் திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.