பச்சூா் பழையபேட்டையில் மயானத்துக்கு இடம்: எம்எல்ஏ ஆய்வு
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் பழையபேட்டை பகுதியில் மயானம் அமைக்க இடம் தோ்வு செய்வது குறித்து ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க. தேவராஜி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அக்கிராம மக்கள் மயானத்துக்கு இடம் கேட்டு பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்து வருகின்றனா். மேலும், புதன்கிழமை நாட்டறம்பள்ளியில் நடைபெற்ற ஜமாபந்தியில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி மற்றும் எம்எல்ஏ க.தேவராஜிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
இதையடுத்து வியாழக்கிழமை எம்எல்ஏ தேவராஜி பழையபேட்டை பகுதிக்கு அதிகாரிகளுடன் நேரில் சென்று மயானத்துக்கு தகுதியான இடம் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின் போது ஒன்றியக்குழு தலைவா் வெண்மதி முனிசாமி மற்றும் ஊா்பொதுமக்கள் உடனிருந்தனா்.