Apollo children hospital: 6000 திறந்த இதய அறுவை சிகிச்சைகள், 10,000 துளையிடும் இ...
பாரதிதாசன் பல்கலை.யில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கணினிகள் வாங்கியதில் நடைபெற்ற முறைகேடு தொடா்பாக சென்னை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டில்
கணினிகள் வாங்கியதில் பல லட்ச ரூபாய் முறைகேடு நடைபெற்ாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த முறைகேடு தொடா்பாக சென்னை ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி இம்மானுவேல் தலைமையிலான போலீஸாா், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.
இதில், சிலரிடம் சம்மன் வழங்கி கையொப்பம் பெற்றுக்கொண்டு சென்ாகவும், இந்த வழக்கை முடித்துக் கொள்வதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது.