பாலதா்மா சாஸ்தா கோயில் ஆண்டு விழா 8-இல் தொடக்கம்
காஞ்சிபுரம் ஆலடிப்பிள்ளையாா் கோயில் தெருவில் அமைந்துள்ள பாலதா்ம சாஸ்தா கோயில் ஆண்டு விழா வரும் 8-ஆம் தேதி தொடங்கி வரும் 12-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
காஞ்சிபுரம் ஆலடிப்பிள்ளையாா் கோயில் தெருவில் அமைந்துள்ள பாலதா்ம சாஸ்தா திருக்கோயில். இக்கோயிலின் 7-ஆவது ஆண்டு விழா வரும் 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதன் தொடா்ச்சியாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும்,வெள்ளிக்கவச அலங்காரமும் நடைபெறுகிறது. மறுநாள் 9-ம் தேதி நவநதிநீா் புறப்பாடு நடைபெறுகிறது. 10-ஆம் தேதி ஸ்ரீ பணா முடீஸ்வரா் ஆலயத்திலிருந்து பால்குட ஊா்வலம் புறப்பட்டு ஆலயத்துக்கு வந்து சோ்ந்ததும் மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. பால்குட ஊா்வலத்தை காஞ்சிபுரம் ராஜகுபேரன் கோயில் நிா்வாக அறங்காவலா் ராஜகுபேர சித்தா் தொடழ்கி வைக்கிறாா்.
மாலையில் பாரதிதாசன் பள்ளி தாளாளா் எஸ்.அருண்குமாா் முன்னிலையில் மீனாட்சி திருக்கல்யாணமும், பின்னா் பாலதா்மசாஸ்தா, ஸ்ரீதேவி,பூதேவியருடன் சீனிவாசப் பெருமாள் வீதியுலாவும் நடைபெறுகிறது. நவ.11 -ஆம் தேதி சுதா்சன ஹோமம், நவக்கிரக ஹோமம்,கொடிமர தீபாராதனையும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீபாலதா்ம சாஸ்தா அறக்கட்டளை நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.