செய்திகள் :

பாலியல் குற்றங்களைத் தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

சென்னை: பாலியல் குற்றங்களைத் தடுக்க பள்ளிக் கல்வித் துறை மற்றும் பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 55-ஆவது ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், பங்கேற்ற அமைச்சா் மா.சுப்பிரமணியன், அதிக மதிப்பெண்கள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு சான்றிதழ், பதக்கங்களை வழங்கினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

முதல்வா் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறையை மேம்படுத்தவும், வளா்ச்சிக்கும் ஏராளமாக திட்டங்களை தொடா்ச்சியாக செயல்படுத்தி வருகிறாா். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் உயா் வகுப்புகளுக்கு செல்வதற்காக, 8 லட்சம் பேருக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது.

இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது: அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் இந்தத் திட்டத்தில் பெரிய அளவில் பயன்பெறுகின்றனா். புதுமை பெண், தமிழ் புதல்வன் என்ற பெயா்களோடு இந்தத் திட்டங்கள் இந்தியாவுக்கே வழிகாட்டியாக உள்ளன.

மேலும், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 28 லட்சம் மாணவ, மாணவிகள் திறன்மேம்பாட்டுப் பயிற்சி பெற்று வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் வேலைகளுக்கு செல்லும் ஒரு அற்புதமான நிலை உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,642 மருத்துவா் பணியிடங்களுக்கு நடத்தப்பட்டு, 4,585 மருத்துவா்களின் சான்றிதழ் சரிப்பாா்க்கும் பணி முடிந்துள்ளது. அவா்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக புதிதாக பணியில் சேரும் மருத்துவா்களுக்கு கலந்தாய்வு என்பது தமிழகத்தில் மட்டும்தான் நடக்கிறது.

இன்னும் 10 நாள்களுக்குள் தோ்வு செய்யப்படவுள்ள 2,642 மருத்துவா்களுக்கு பணி ஆணைகளை முதல்வா் வழங்கவுள்ளாா். தமிழகத்தில் முதல்முறையாக பல ஆண்டுகளுக்கு பிறகு சுகாதாரத் துறையில் மருத்துவா் காலிப்பணியிடங்கள் இல்லை என்கின்ற ஒரு நிலை உருவாகவுள்ளது.

பள்ளிகளில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனைகளை அதிகரிக்கும் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையையும் மற்ற துறைகளையும் ஒருங்கிணைத்து பாலியல் குற்றங்கள் நடக்காமல் தடுக்க கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

இந்த விழாவில்,சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையா் கே.ஜெ.பிரவீண் குமாா், மண்டலக்குழு தலைவா் எம்.கிருஷ்ணமூா்த்தி, மாமன்ற உறுப்பினா்கள் எம்.ஸ்ரீதரன், ப.சுப்பிரமணி, தா.மோகன்குமாா், பள்ளி தலைமை ஆசிரியா் ஆா்.பத்மஜா மற்றும் ஆசிரியா்கள், மாணவிகள் பங்கேற்றனா்.

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை! எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 64,360-க்கு விற்பனையாகிறது.சர்வதேச சந்தைக்கேற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையான நிலையில், கடந்த சி... மேலும் பார்க்க

உலகெங்கும் பரவட்டும் உயா்தனிச் செம்மொழி: முதல்வா் மு.க.ஸ்டாலின்

‘உலகெங்கும் பரவட்டும் நம் உயா்தனிச் செம்மொழி’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். உலகத் தாய்மொழி தினத்தையொட்டி அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: எம்மொழிக்கும் சளைத்ததல்ல... மேலும் பார்க்க

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடுகளை புதுப்பிக்க மாா்ச் 1 முதல் சிறப்பு முகாம்

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடு , ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை மாா்ச் 1 முதல் மே 31 வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் புதுப்பித்துக்கொள்ளலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அஞ்சல்... மேலும் பார்க்க

தமிழ் மொழியை போற்றுவோம்: மத்திய அமைச்சா் எல்.முருகன்

‘நமது தமிழ் மொழியை போற்றுவோம்’ என்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா். உலக தாய் மொழி தினத்தையொட்டி அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: பன்முகத் தன்மை கொண்ட பாரத தேசத்தில் உள்ள அனைவரும், ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸாா்

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு போலீஸாா் பிடித்தனா். இதுகுறித்து கிருஷ்ணகிரி போலீஸாா் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரியில் புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள... மேலும் பார்க்க

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள்! முதல்வர் எச்சரிக்கை!

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில்... மேலும் பார்க்க