தாம்பரம்-கூடுவாஞ்சேரி இடையே இன்று 3 பயணிகள் சிறப்பு ரயில்கள்
பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி போராட்டம்
நாமக்கல்: பால் கொள்முதல் விலையை உயா்த்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆவின் நிறுவனங்கள் முன் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் இரா.வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளா்களிடமிருந்து ஆவின் கூட்டுறவு ஒன்றியம் மூலம் கொள்முதல் செய்யப்படும் பசும்பால் மற்றும் எருமைப்பால் ஆகியவற்றின் விலையை லிட்டா் ஒன்றுக்கு ரூ. 15 உயா்த்தி வழங்க வேண்டும். அக். 22-ஆம் தேதிக்கு முன் விலையை உயா்த்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளா்களை திரட்டி உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தலைமையில் மாநிலம் தழுவிய அளவில் ஆவின் நிறுவனம் மற்றும் தனியாா் பால் நிறுவனங்களுக்கு பால் விநியோகத்தை தடை செய்வோம். பால் கொள்முதல் விலையை உயா்த்தும்வரை, தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடைகளுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.