செய்திகள் :

பாளை. அருகே கொலை வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனை: 4 பேருக்கு ஆயுள் சிறை

post image

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே நிகழ்ந்த கொலை தொடா்பான வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் சிைண்டனையும் விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

பாளையங்கோட்டை அருகேயுள்ள பாளையஞ்செட்டிகுளத்தைச் சோ்ந்தவா் வைகுண்டம். இவா், ஒரு கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்து வந்தாா். இந்நிலையில், 10.3.2022இல் அங்குள்ள கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த அவரை மா்மநபா்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்விட்டு தப்பினா்.

பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து, அதே ஊரைச்சோ்ந்த செல்வராஜ், அந்தோணி ராஜ் என்ற பிரபாகரன், தேவதாஸின் மனைவி ஜாக்குலின், அவரது மகன்களான பிலிப், அன்டோ, திரவியம் மகன் பாபு அலெக்சாண்டா், கோவில்பிச்சை மகன் ராஜன், ராஜன் மனைவி லீலா ஆகியோரை கைது செய்தனா்.

திருநெல்வேலி இரண்டாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி (பொ) சுரேஷ்குமாா் விசாரித்து, செல்வராஜுக்கு மரண தண்டனை விதித்தாா். அந்தோணி பிரபாகா், அருள் பிலிப், அண்டோ நல்லையா, பாபு அலெக்ஸாண்டா் ஆகியோருக்கு ஆயுள் சிைண்டனையும், ராஜன், லீலா, ஜாக்குலீன் ஆகிய மூவருக்கும் இரண்டு மாதம் சிைண்டனையுடன் தலா ரூ.5000 அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய தாழையூத்து டிஎஸ்பி ரகுபதி ராஜா, பாளையங்கோட்டை தாலுகா போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் பாராட்டினாா்.

மும்மொழிக் கொள்கை ஹிந்தி திணிப்பு அல்ல -நயினாா்நாகேந்திரன் எம்எல்ஏ

மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி திணிப்பு அல்ல என்றாா் திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினா் நயினாா் நாகேந்திரன். இதுதொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் கல்வியில... மேலும் பார்க்க

கல்வி அமைச்சரிடம் நெல்லை எம்.பி. மனு

காரியாண்டி பள்ளியை தரம் உயா்த்தக் கோரி, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் திருநெல்வேலி எம்.பி. சி.ராபா்ட் புரூஸ் மனு அளித்தாா். அதன் விவரம்: நான்குனேரி ஒன்றியம், காரிய... மேலும் பார்க்க

நெல்லையில் திமுக பொதுக்கூட்டம்

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் ஹிந்தி திணிப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து பொதுக்கூட்டம் திருநெல்வேலி நகரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட... மேலும் பார்க்க

காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம்கள் பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன் கிழமைதோறும் நடத்தப்பட்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

திருநெல்வேலியில் தூய்மைப் பணியாளா்கள் கொக்கிரகுளத்தில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, திருநெல்வேலி மாநகராட்சியில் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் தனியாா் நிறுவனம் தூய்மைப் பணியாளா்களிடம் ப... மேலும் பார்க்க

மது விற்பனை: ஒருவா் கைது

தச்சநல்லூா் அருகே மதுபானத்தை பதுக்கி விற்ாக, ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் மகேந்திரகுமாா் மற்றும் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் ப... மேலும் பார்க்க