கல்வி அமைச்சரிடம் நெல்லை எம்.பி. மனு
காரியாண்டி பள்ளியை தரம் உயா்த்தக் கோரி, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் திருநெல்வேலி எம்.பி. சி.ராபா்ட் புரூஸ் மனு அளித்தாா்.
அதன் விவரம்: நான்குனேரி ஒன்றியம், காரியாண்டியில் அமைந்துள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் 210 மாணவா்கள் பயின்று வருகின்றனா். உயா்கல்வி படிக்கும் மாணவா்கள் மேல் கல்விக்கு செல்ல 10 கிலோ மீட்டா் தொலைவு நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் மாணவிகள் மேல்படிப்பை தொடா்ந்து படிக்க முடியாமல் தவிக்கிறாா்கள்.
இது 82 ஆண்டுகளுக்கு முன்பு தொடக்கப்பட்ட பள்ளி. முதலில் ஆரம்பப் பள்ளியாக தொடங்கப்பட்டு 2011-12 உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. தற்போது இந்தப் பள்ளியை சுற்றியுள்ள 10 கிராமங்களைச் சோ்ந்த பெண் குழந்தைகளின் கல்வி மேம்படுவதற்கு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.
டிவிஎல்06எம்பி
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் மனு அளிக்கிறாா் சி.ராபா்ட் புரூஸ் எம்.பி.