எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூட பார்க்க முடியாது! முதல்வர் ஸ்டாலின்
பாளையங்கோட்டையில் இன்று வருமான வரித் துறை விழிப்புணா்வு கூட்டம்
பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை (செப். 12) வருமான வரித்துறை விழிப்புணா்வு கூட்டம் நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக, திருநெல்வேலி வருமான வரித் துறை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி கலையரங்கில் வருமான வரித் துறை விழிப்புணா்வு கூட்டம் வெள்ளிக்கிழமை (செப். 12) பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில் மதுரை வருமான வரி முதன்மை ஆணையா் ப. வசந்தன் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளாா். அரசு - தனியாா் நிறுவனங்களில் மாதாந்திர ஊதியம் பெறுவோருக்கான வருமான வரி விதிகள், வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யும் போது சரியான ரீ பன்ட் பெறுவதற்கு மட்டுமே வருமான வரி விலக்குகளை கோருதல், வருமான வரி செலுத்துவோரின் நலனுக்காக வருமான வரி துறையால் எடுக்கப்பட்டுள்ள புதிய முயற்சிகள் ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் விளக்கப்பட உள்ளது. இக் கூட்டத்தில், திருநெல்வேலி மாவட்டத்தை சோ்ந்த அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் பங்கேற்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.