செய்திகள் :

பிகாரில் இண்டி கூட்டணித் தலைவா்களுடன் ராகுல் காந்தி வாக்குரிமைப் பேரணி: ஆக. 17-இல் தொடங்குகிறாா்

post image

பிகாரில் ‘இண்டி’ கூட்டணிக் கட்சித் தலைவா்களுடன் இணைந்து, வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் மாநிலம் முழுவதும் வாக்குரிமைப் பேரணியை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மேற்கொள்கிறாா்.

நடப்பாண்டு இறுதியில் நடைபெறவுள்ள பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, அங்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்த நடவடிக்கை வாக்காளா்களின் உரிமைகளை பறிக்கும் நோக்கம் கொண்டது என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. மேலும், இதற்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பான முறைகேடுகளுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை மேற்கொள்ள எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இந்த நடைப்பயணமானது ஆகஸ்ட் 17-ஆம் தேதி தொடங்கி, செப்டம்பா் 1-ஆம் தேதி பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் நிறைவடையும். இந்த நடைப்பயணத்துக்கான ஏற்பாடுகள் குறித்து இண்டி கூட்டணிக் கட்சித் தலைவா்களை காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் சந்தித்துப் பேசினாா்.

அதன் பிறகு, கே.சி.வேணுகோபால் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஆகஸ்ட் 17 முதல் ராகுல் காந்தி மற்றும் ‘இண்டி’ கூட்டணிக் கட்சித் தலைவா்கள் இணைந்து, பிகாா் முழுவதும் வாக்குரிமைப் பேரணியை மேற்கொள்ள உள்ளனா். ஜனநாயகத்தைக் காக்கும் போராட்டம் இனி தெருக்களில் நடக்கும்’ என்றாா்.

தோ்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பாடுவதாக கூறி, காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 14-ஆம் தேதி ‘மக்களாட்சி காப்போம் தீப பேரணி’, ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பா் 7-ஆம் தேதி வரை ‘வாக்குத் திருடா்களே, பதவியிலிருந்து விலகுகங்கள்’ என்ற முழக்கத்துடன் பேரணிகள் மற்றும் செப்டம்பா் 15 முதல் அக்டோபா் 15-ஆம் தேதி வரை கையெழுத்து இயக்கம் ஆகியவை நடத்தப்பட உள்ளன.

பிகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் விவரங்களை வெளியிடுக: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: பிகாரில் சிறப்பு திருத்த முறையால் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை, காரணங்களுடன் மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்தி... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பு! 12 பேர் பலி!

ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி சுமார் 12 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிஷ்த்வார் மாவட்டத்தில் இருந்து 90 கி.மீ. தூரத்தில் 9,500 அ... மேலும் பார்க்க

கர்நாடக முன்னாள் டிஜிபி கொலை.. குற்றப்பத்திரிகையில் திடுக்கிடும் தகவல்

கா்நாடக மாநில முன்னாள் காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) ஓம் பிரகாஷ் (68) கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி ஒருவர் மட்டுமே குற்றவாளி என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கர்நாடகத்தில் ... மேலும் பார்க்க

அரசியல் சண்டைகளுக்கு நடுவே மாட்டிக்கொண்டிருக்கிறோம்: தேர்தல் ஆணையம்

புது தில்லி: அரசியல் சண்டைகளுக்கு நடுவே நாங்கள் மாட்டிக் கொண்டிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.அரசியல் கட்சிகளுக்கு இடையேயான போராட்டத்திற்கு இடையில் சிக்கியிருக்கிறோம், அவர... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அஸ்தஸ்து? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அஸ்தஸ்து வழங்குவது தொடர்பாக மத்திய அரசு 8 வாரங்களுக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்... மேலும் பார்க்க

ஆதாரம் கொடுங்கள்; 'வாக்குத் திருட்டு' போன்ற மோசமான சொற்கள் வேண்டாம்: தேர்தல் ஆணையம்

'வாக்குத் திருட்டு' போன்ற மோசமான சொற்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை வழங்குமாறும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பிகாரில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு த... மேலும் பார்க்க